வீடியோ).,முஸ்லிம்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் அரச காணிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றதா.? சாட்டோ மன்சூருடன் விரிவான பார்வை
Ihzana Fareed
கல்குடா, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம், கோறளப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை எல்லைகளுக்கு உட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் பட்டியடிவெளி விவசாய கண்டத்தில் உள்ள முஸ்லிம் விவசாயிகளான நொத்தாரிசாக கடமையாற்றுகின்ற ஏ.எல்.எம்.பாரூக், பீர் மொஹம்மட், மம்மூசி, மொஹம்மட் பழீல்,ஆகியோர்களுக்கு சொந்தமான.. 27 ஏக்கர் காணிகளை அபகரித்து அரச காணிகளாக அடையாளப்படுத்தி தமிழ் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்களை வழங்கி இனமுறுகளை அப்பிரதேசத்தின் கிராம சேவையாளர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு வருக்கின்றது.
மேலும் கிரான் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மரைக்கார் திடல் அல்லது சேரடிமுனை அல்லது சோலிமுனை என்றழைக்கப்படும் நான்கு பக்கங்களும் ஆறுகளாலும், ஓடைகளாலும் சூழப்பட்ட நூறுவீதம் முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் முன்னூறு ஏக்கர் விவசாய காணிகளை அரச காணிகளாக அப்பிரதேசத்தின் கிராம சேவையாளர் தலைமையில் அடையாளப்படுத்தி அபகரிப்பதற்கான முயற்சிகளில் தமிழ் மக்களை நகர்த்தி உள்ளனர்.
மேற்படி குறித்த முஸ்லிம்களுக்கு சொந்தமான வரலாற்று பூர்வமான காணிகள் 1913ம் ஆண்டு தொடக்கம் அரசாங்களால் வழங்கப்பட்ட உறுதி ஆவணங்கள், இதர ஆதாரங்கள் என்பன உள்ன. ஆகவே குறித்த பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் உறவுகளில் இன முறுகளினை ஏற்படுத்த கூடிய மேற்படி பிரச்சனைகளை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், ஏனைய நிருவாக உத்தியோகத்தர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், மற்றும் ஏனைய தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள், புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள், தமிழ் மக்கள் பேரவை, போன்றவைகள் உடனடி கவனமெடுத்து நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களும், சமூக ஆர்வலருமான சாட்டோ வை.எல்.மன்சூரும் வேண்டி நிற்கின்றனர்.
மேலும் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள காணிகள் சம்பந்தமான உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு குறித்த பிரதேசத்திற்கு சென்று விரிவான விளக்கத்தினை தரும் சாட்டோ மன்சூரின் விளக்கத்துடனான விரிவான காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Comments
Post a Comment