ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சர்வதேசம் கைகொடுக்குமா
ஹஸன் இக்பால்
கடந்த வாரம் தொட்டு சர்வதேச அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுமா? மனிதாபிமானம் மரித்துப்போன மண்ணில் ரோஹிங்யா முஸ்லிம்கள் நிலைபெற சர்வதேச சமூகம் கைகொடுக்குமா? மனிதநேயத்தை போதிக்கும் மதவாதிகள் வாழும் நாட்டில் குருதி பாயும் நிலை கண்டும் கலங்காத உள்நாட்டு தலைமைகள் இனச்சுத்திகரிப்பை ஆதரிக்கின்றதா? உலக சமாதானத்தை உறுதிப்படுத்தவென ஸ்தாபிக்கப்பட்ட ஐ.நா. சபை உயிரோட்டம் இழந்துள்ளதா? என பலவாறான கேள்விகளை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவத்தின் அட்டூழியங்களும் அரசின் மெத்தனமும் எழச் செய்துள்ளன.
ஆகஸ்ட் 25 இல் பொலிஸ் காவலரண்களை தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மியன்மார் இராணுவம் ஈவிரக்கமின்றி ரோஹிங்க்யர்களை கொன்றொழிக்கும் தமது செயற்றிட்டத்தை மீண்டும் செவ்வனே கையிலெடுத்தது. இன்று வரை ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்களின் உயிர்களைப் பறிக்கவும், 90,000 க்கும் அதிகமான அகதிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அயல்நாட்டுக்கு சொந்த நாடு விட்டு காடு தாண்டி தஞ்சம் புகவும் ஏதுவான இராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்து மியன்மார் அரசு மௌனியாக இருப்பது இனவழிப்புக்கு தனது பேராதரவை மறைமுகமாக வழங்குவது போலவே தோற்றுகிறது. மியன்மாரின் அரசியல் தலைவரான சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி எனும் பெண் ஆளுமை, தான் கட்டிக் காத்த உலக மக்களினதும் தலைவர்களினதும் பேராதரவையும் அபிமானத்தையும் வெகுவாக இழந்து வருகின்றமை கண்கூடு.
கறுப்பின மக்களின் எழுச்சிக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலா போன்ற உயரிய ஆளுமைகளுக்கு நிகராக பேசப்பட்ட, உலக சமாதான குறியீட்டு ஆளுமையாக வலம் வந்த, பலரதும் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ற ஆங்சாங் சூகி அனைத்துக்கும் நேரெதிராக அடிப்படை மனித உரிமைகளையும் மறுக்கின்ற, சிறுபான்மைகளை வேரோடு பிடுங்கி எறிகின்ற நாட்டின் தலைவியாக இருக்கின்றமை ஜீரணிக்க முடியாத விடயமாகிப் போயுள்ளது. ஒரு பிரஜையின் அடிப்படை உரிமையான வாழும் உரிமையே பறிபோயுள்ள நிலையில் உயிருக்காகப் போராடும் ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் வன்முறை புரியும் இராணுவத்தினருக்கு ஆதரவாக ஆங்சாங் சூகி செயற்பட்டு வருவது அவர் பெற்றுக்கொண்ட உயரிய சமாதானத்துக்கான நோபல் பரிசின் தகைமைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. மியன்மாரில் இடம்பெற்று வரும் இனவழிப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஐ.நா. முயன்றாலும் ஆங்சாங் சூகி ஐ.நா. அதிகாரிகளுக்கு வீசா வழங்குவதை தடுத்தி நிறுத்தி ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண தடைக்கல்லாக விளங்குகின்றமை மனித உரிமை ஆர்வலர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான புதிய தாக்குதல் நடவடிக்கையினால் மாத்திரம் பத்து நாட்களுக்குள் 90,000 ரோஹிங்யர்கள் பங்களாதேஷ் நாட்டுக்கு அடைக்கலம் கோரித் தப்பிச் சென்றுள்ளனர் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
ஒதுக்கப்பட்ட இனக்குழுவாக சொந்த நாட்டில் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் அஞ்சி நடுங்கி வாழ்வதைக் காட்டிலும் அகதியாக வேறு நாட்டில் குடியமர்வது நலம் என ரோஹிங்யர்கள் கருதுகின்றனர்.
மியன்மார் இராணுவம் பொதுமக்களை கொன்று குவிப்பதை மறுத்து, இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ரோஹிங்ய ஆயுதக் குழுவினரையே அழித்து வருவதாக ஆங்சாங் சூகி அரசு சர்வதேசத்துக்கு தெரிவித்து வருகின்றது. எனினும் ஐ.நா. தனது அறிக்கையில் மியன்மார் இராணுவத்தின் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையை “இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை” என்றே வர்ணித்துள்ளது.
"ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் செய்திகளை கேட்கும்போது என் இதயம் வெடித்து சுக்கு நூறாகிறது. மியன்மாரில் மனிதாபிமானம் இழிநிலைக்கு சென்றுள்ளமை வருத்தமளிக்கின்றது. இதற்கு எதிராக கடந்த பல வருடங்களாக கண்டனம் தெரிவித்தே வருகின்றேன். எனது சக நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி இது தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்வார் என நான் நம்புகிறேன்” என்றவாறு நோபல் பரிசு பெற்ற மலாலா தனது கண்டனத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
“ஆங்சாங் சூகியின் மௌனம் ஏமாற்றத்தை தருகிறது. மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காது மௌனம் காக்கின்றார். இது கண்டனத்துக்குரியது” என மலேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் சாடியுள்ளார். "முஸ்லிம் சிறுபான்மை மீது நடாத்தப்படும் வன்முறை நடவடிக்கைகளை மியன்மார் அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் காவாஜா முஹம்மத் ஆஸிப் அழுத்தம் கொடுத்துள்ளார். “இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து முஸ்லிம்களை மீட்க சர்வதேசம் அணிதிரள வேண்டும். இது விடயத்தில் ஐ.நா. உயிரோட்டமாக செயற்பட வேண்டும்” என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவாத் ஸரிப் காட்டம் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மியன்மார் தூதராலயத்திற்கு முன்னால் ரஷ்யா தலைநகர் மொஸ்க்கோவில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது எதிர்ப்புக் கோஷங்களை தாங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துருக்கி ஜனாதிபதி அர்துகான் மியன்மார் அரசுக்கு பகிரங்க கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மியன்மார் அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்க பல்வேறு நாட்டு தலைமைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறாக ரோஹிங்யா விவகாரம் சர்வதேச கவனயீர்ப்பை பெற்றுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். கண்டனக் குரல்கள் காரியச் செயல்களாக மாற்றம் பெற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. ரோஹிங்யர்கள் விடயத்தில் நிரந்தர, தீர்க்கமான முடிவுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சொந்த நாட்டில் நிம்மதியாகவும் சகல தனி மனித உரிமைகளை அனுபவிக்கக் கூடியவர்களாகவும் அவர்கள் வாழ வேண்டும் என்பதே அநேகரின் அவா.
மியன்மார் அரசின் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறலானது அந்நாட்டை மலேஷியா, இந்தோனேஷியா, துருக்கி போன்ற சக முஸ்லிம் நாடுகள் இராஜ தந்திர ரீதியில் புறக்கணிக்க ஏதுவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மியன்மார் அரசு ரோஹிங்ய முஸ்லிம்கள் விடயத்தில் நீதியை பெற்றுக் கொடுக்க, உரிமைகளை மீளக் கையளிக்க காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காதவரை அந்நாட்டுடனான சகல இராஜதந்திர உறவுகளையும் துண்டிப்பதாக மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் நாடான இந்தோனேஷியாவில் மியன்மார் அரசுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலைகள் காரணமாக இந்தோனேஷியா தன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை மனித உரிமை மீறலை உடனடியாக நிறுத்துமாறு நேரில் அழுத்தம் கொடுக்கவென மியன்மார் நாட்டுக்கு அனுப்பியது. வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்னோ மர்சூதி, ஆங்சாங் சூகியையும் மியன்மார் இராணுவ படை தளபதி மின்ஆங்ஹுலைனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த சில நாட்களில் பல்வேறு நாடுகளின் மியன்மார் தூதரகங்களின் முன்னால் மியன்மார் அரசின் மிலேச்சத்தனங்களுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இந்தோனேஷியாவில் மியன்மார் தூதரகத்திற்கு முன்னால் கூடிய மக்கள் குழு தூதரகம் மீது பெற்றோல் குண்டு ஒன்றை வீசிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் அமைந்து மியன்மார் தூதரகங்களினதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மீள குடியிருப்புக்களை ஏற்படுத்தி, அடிப்படை வாழ்க்கை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஐ.நா. மேற்பார்வையில் ராக்கைன் மாநில முஸ்லிம்களது உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் வாழும் ராக்கைன் மாநில பகுதிகளில் அளவுக்கதிகமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவ நிலைகள் அகற்றப்பட வேண்டும் என்பனவே குறுகிய கால நிறைவேற்றுத் தீர்மானங்களாக மியன்மார் அரசுக்கு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி நிற்கும் கோரிக்கைகளாகும்.
ராக்கைன் பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறுகின்ற வன்முறைக்கு உரிய முடிவை மியன்மார் அரசு எடுக்க மறுத்தால், இந்நிலைமை சிறுபான்மை முஸ்லிம்களும் பெரும்பான்மை பௌத்தர்களாக ஒன்றிணைந்து வாழக்கூடிய மியன்மாரின் ஏனைய பகுதிகளிலும் தொற்று நோயாய் பரவக் கூடும். ராக்கைன் மாநிலத்தில் மாத்திரம் இடம்பெற்று வரும் இனச்சுத்திகரிப்பு அரசினால் போஷிக்கப்பட்டால் எதிர்காலங்களில் நாடு முழுதும் பரவி கட்டுக்கடங்காத கலவரமாக முற்றி வெடிக்கக் கூடும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
"மியன்மாரில் காலா காலமாக வாழ்ந்து வரும் ரோஹிங்யர்களை வந்தேறிகள் என கருதி அரசினால் பிராஜாவுரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. பிரஜாவுரிமை மறுப்பானது ஒரு நாட்டில் சுதேசி அனுபவிக்கக் கூடிய அனைத்து உரிமைகளையும் களையும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. இது அரசு சொந்த நாட்டின் இனக்குழு ஒன்றுக்கு செய்யும் மிகப் பெரும் துரோகமாகும். இந்நிலை மாற்றப்பட வேண்டும். ரோஹிங்யர்களை சுதேசிகள் என ஏற்று ஏனைய மக்களைப் போன்று அனைத்து நியாயமான உரிமைகளும் இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்" என முன்னாள் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கொபி அனானினால் வழிநடாத்தப்படும் ராக்கைன் மாநில ஆலோசக அமையம் விதந்துரைப்புக்களை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. இவ்விதந்துரைப்புக்கள் வெளியிடப்பட்டு சில மணிநேரங்களின் பின்னரே இராணுவத்தின் வன்முறைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவம் கூறுவதுபோல் ரோஹிங்யர்கள் காவலரண்களை தாக்கியமை வன்முறைக்கு வழிசமைத்ததா? அல்லது ஆலோசக அமையம் வெளியிட்ட விதந்துரைப்புக்கள் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசே வலிந்து வன்முறையை உருவாக்கியதா? என்பது மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கேள்வியாக எழுந்துள்ளது.
அரசினால் ஒடுக்கப்பட்ட இனக்குழுவினருக்கு உதவ முன்வரும் தன்னார்வ அமைப்புக்கு மியன்மார் அரசு “தீவிரவாத அனுதாபிகள்” என இழித்துரைக்கின்றமை மியன்மாரில் மனிதாபிமானம் மரித்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.
ரோஹிங்யா முஸ்லிம்களை மியன்மார் நாட்டின் சுதேசிகளாக அங்கீகரிப்பதில் மியன்மாரின் பௌத்த தீவிர போக்குடைய அமைப்புக்கள் தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால் ரோஹிங்யர்கள் தலைமுறை தலைமுறையாக மியன்மாரின் ராக்கைன் பகுதியில் வாழ்ந்து வருவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனினும் அரசு அதனை மெத்தனப்போக்கில் மறுத்தே வருகின்றது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அரசு காட்டி வரும் வெறுப்புணர்ச்சியும் பாகுபாடும் அதனால் வழிவந்த முஸ்லிம் நாடுகளின் மியன்மார் மீதான கசப்புணர்வுகள் என்பன நீண்டகாலத்தில் ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் தடைக்கல்லாக விளங்கும் என்பதை அரசு உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மியன்மார் அரசும் தீவிர போக்குடைய பௌத்த அமைப்புக்களும் ரோஹிங்யர்களை தம் நாட்டு சொந்த பிரஜைகளாக அங்கீகரித்து அரவணைப்பதே இந்நீண்டகால தீரா பிரச்சினையின் இறுதி தீர்வாகும். இதற்கு ஐ.நா. சபை வெறும் அறிக்கை விடும் சபையாக அன்றி உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக உயிரோட்டமுள்ளதாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment