சிங்கத்தை கண்டு தப்பியோடும் ஓநாயின் நிலையில் நல்லாட்சி அரசாங்கம்...!
மைத்திரியும் ரணிலும் சேர்ந்து அமைத்துள்ள கூட்டரசாங்கம் நீடிப்பதாக இருந்தால் எந்த தேர்தலும் இந்த காலத்தில் நடக்கக்கூடாது என்பதே இவர்களின் திட்டமாகும். அப்படி தேர்தல் நடந்தால் ஜனாதிபதி மைத்திரியின் சாயம் வெழுத்துவிடும். அப்படி சாயம் வெழுத்துவிட்டால் ரணிலின் ஆட்சி அம்போ என்றாகிவிடும்.
அதனால் மைத்திரி அவர்கள் ரணிலையும்..., ரணில் அவர்கள் மைத்திரியையும்..., இவர்கள் இருவரையும் சம்பந்தன் ஐயா அவர்களும் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால் அந்த தேர்தல் மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான கௌரவ போட்டியாகவே மாறிவிடும் என்ற சாத்தியக் கூறுகளே காணப்படுகின்றன.
ரணிலை பொறுத்தவரை அவருடைய கட்சிக்கு அன்னளவாக 40லட்சம் வாக்குகள் உண்டு, அதனால் அவர்களுடைய கட்சி படுதோல்வி அடையக்கூடிய நிலையில் இல்லை எனலாம்.
அதே நேரம் ஐ.தே.கட்சியினதும் சிறுபாண்மை மக்களினதும் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெறிவு செய்யப்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு எதிரே வரும் தேர்தல்களில் ஐ.தே.கட்சிக்காரர்கள் வாக்களிக்கமாட்டார்கள், ஏனென்றால் மைத்திரி அவர்கள் சு.கட்சியின் தலைவராக இருப்பதனாலாகும்.
இதனால், ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எதிராக வாக்களித்த சு.கூட்டமைப்பின் 58லட்சம் மக்களும் எதிர்வரும் தேர்தல்களில் தனக்கு வாக்களிப்பார்களா? என்ற பயமும் மைத்திரி அவர்களுக்கு இருந்து வருகின்றது.
இதன் காரணமாக மைத்திரி அவர்கள் தலைமைதாங்கும் சுதந்திரக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்து, அதன் காரணமாக மஹிந்த அணி கூடுதலான வாக்குகளை பெற்றால் மைத்திரியின் "வாக்குபலம்" என்னும் சாயம் வெழுத்துவிடும்.
அதன் பின் கூடுதலான வாக்குகளைப்பெற்ற மஹிந்த அணிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பதவியை கொடுக்கவேண்டிய நிலையும் வரும்.
அதோடு மக்கள் ஆதரவு இல்லாத ஜனாதிபதி என்ற விடயமும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
அப்படியொரு நிலை ஏற்பட்டால் மைத்திரி அவர்கள் ஒரு பொம்மை ஜனாதிபதியாக இருப்பது மட்டுமல்ல, கூட்டரசாங்கத்தில் சம பங்காளிகளாக இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்ற தோற்றப்பாடும் ஏற்பட்டுவிடும். அதற்கப்புறம் அவரோடு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்த அணியின் பக்கம் வரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டுவிட்டால், பெருத்த அவமானத்தை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் சந்திக்கவேண்டி நிலையும் வரலாம்.
இதன் காரணமாக ரணில் அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும், அதற்கிடையில் இந்த அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டுவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கின்ற சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் இந்த நிலைமைகள் பேரிடியாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்து விடலாம்.
இதற்காகத்தான் சம்பந்தன் ஐயா அவர்கள் என்னவிலை கொடுத்தாவது மைத்திரியின் சாயம் வெழுத்துவிடாமல் பார்த்துக் கொண்டுவருகின்றார் என்பதே உண்மையாகும்.
அதற்காகத்தான் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களையும், மாகாணசபை தேர்தல்களையும் நடத்த விடாமல் என்னவெல்லாம் செய்யலாமோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகின்றார்கள் இந்த நல்லாட்சிக்காரர்கள்.
அற்காக தற்போது கலைக்கப்படவுள்ள மாகாண சபைகளின் தேர்தல்களை, 2019வரை நடத்திவிடாமல் தடுப்பதற்கு 20வது திருத்தச்சட்டத்தை கொண்டுவருகின்றார்கள் என்பதே உண்மையாகும். அந்த திருத்தச்சட்டம் மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கின்றது என்று தெறிந்து கொண்டும் சம்பந்தன் ஐயா அவர்களும் அவரது சகாக்களும் அதற்கு ஆதரவு தெறிப்பதற்கு முன்னிற்கின்றமையானது ஆச்சரியமான விடயமாக தெறியவில்லை.
அதே வேளை இந்த நாடகங்களுக்கு மத்தியில் தங்களுடைய பைகளை நிறப்பிவிட வேண்டும் என்ற என்னத்தில் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலையும் மு.காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு, இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது எனலாம். அவர்களுக்கு யாருடைய உரிமை பறிபோனாலும் பரவாயில்லை தங்களுடைய "பணப் பசி" தீர்ந்து விட்டால் போதும் என்ற என்னமே அவர்களுக்கு மேலோங்கி நிற்கின்றது. கடந்த காலங்களிலும் நிகழ் காலங்களிலும் அவர்கள் நடந்து கொண்டுவரும் விடயமே அதற்கு சாட்சியாகவும் இருந்து வருகின்றது.
இவர்களைப் பொறுத்தவரையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை, எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்தில் எப்படி ஒட்டிக்கொள்ள முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெறிந்த விடயம்தான்.
அதனால்தான் எந்தஅரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்களோ அந்த அரசாங்கத்தின் ஊது குழலாக அவர்கள் மாறிவிடுவார்கள். அதனால் யாரும் அவர்களைக் கண்டு அஞ்சுவது கிடையாது, கொடுக்கவேண்டியதை கொடுத்தால் படுக்கவேண்டிய இடத்தில் படுப்பார்கள் என்பது எதிரிகளுக்கும் தெறிந்த விடயம்தான். அதனால் அவர்களைக் கண்டு யாரும் அலட்டிக்கொள்வதில்லை எனலாம்.
ஆக, தற்போதைய நிலைகைளை கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்த அரசாங்கத்தின் முதுகெழும்பாக இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரி அவர்களின் "வாக்குபல" சாயம் வெழுத்துவிடாமல் பாதுகாப்பதே இவர்களுக்குறிய முக்கிய வேலையாக உள்ளது. அதற்காக என்னை விலை கொடுத்தாவது தேர்தல் ஒன்று வராமல் தடுக்கவேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அதற்காக மக்களின் ஜனாநாயக உரிமையில் கைவைத்து விளையாடுகின்றார்கள், இது எந்தளவு இவர்களுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.


Comments
Post a Comment