மியன்மாரில் நடப்பது இனச்சுத்திகரிப்புக்கு பாடப்புத்தக உதாரணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுஸைன்
மியன்மாரில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் இன சுத்திகரிப்புக்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடியதாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுஸைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களை இலக்குவைத்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இனச் சுத்திகரிப்புக்கான பாடப்புத்தக உதாரணமொன்றாகவுள்ளது. ராகைனில் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கையானது சமத்துவமற்றது என்பது தெளிவானது.
“நாங்கள் பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் கிளர்ச்சிக் குழுவும் ரோஹிங்ய கிராமங்களை எரியூட்டுவதையும் தப்பிச் செல்லும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்துதல் உள்ளடங்கலான நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொள்வதையும் வெளிப்படுத்தும் பல அறிக்கைகளையும் செய்மதி புகைப்படங்களையும் பெற்றுள்ளோம்" எனத் தெரிவித்த அவர், “தற்போது இடம்பெற்று வரும் கொடூர இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரவும் அனைத்து வன்முறைகளுக்கும் பொறுப்புக் கூறவும் மியன்மார் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்" என்று கூறினார்.
அதேசமயம் மியன்மாரின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்கு மனித உரிமைகள் விசாரணையாளர்கள் அங்கு விஜயம் செய்வதற்கு அந்நாடு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவது குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Comments
Post a Comment