அதிபர் சிறிசேனவின் இளைய சகோதரர் பொலிசில் சரண்
ஆரிஃப் எஸ் நளீம்
மேலும் தெரிய வருவதாவது நேற்று நன்பகல் 1:20 மணியளவில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் இளைய சகோதரரும் அரலிய கூட்டு நிறுவனத்தின் முகாமையாளருமாகிய லால் சிறிசேன செலுத்திச்சென்ற லேன்ட் குரொசர் ரக வாகனம் எதுமல்பிடிய எனும் இடத்தில் வைத்து உந்தூர்தி ஒன்றை மோதியதில் அதில் பயணித்த புத்தசாசன,ஜயரட்ட ஆகிய இரு சகோதரர்களும் பலியாகியுள்ளனர்.விபத்தினை நிகழ்திவிட்டு சற்று நேரம் தலைமறைவான லால் சிறிசேன பின்னர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
மைத்திரி பால சிறிசேனவின் ஐந்து சகோதரர்களில் லால் சிறிசேன இளையவர் ஆவார்.குறித்த விபத்தில் சிக்கி பலியான சகோதரர்களில் புத்தசாசன என்பவர் கடும் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டவர்
வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்று திரும்புகையிலேயே விபத்து
நிகழ்ந்துள்ளது.லால் சிரிசேனவின் மிதமிஞ்சிய வேகமே விபத்து இடம்பெற காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக பொலன்னறுவையில் ஏற்பாடாகியுள்ள பல்வேறுபட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவென ஜனாதிபதி தனது சொந்த ஊரான பொலன்னறுவையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment