கொலன்னாவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு


தென் ஆப்பிரிக்காவின் உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை பிரதேசத்தில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த முகவர் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளைக் குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் சபை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பொறுப்பதாரிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Comments