டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முறையாக நேரில் சந்தித்த மைத்திரி மகிழ்ச்சியில்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பாரியார், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியாரை சந்தித்துள்ளனர்.

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக பல நாட்டுத் தலைவர்களும் நியூயோர்க்கிற்கு வருகைத்தந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களையும் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார்.

நானும் எனது மனைவி ஜயந்தியும், அமெரிக்க ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் நியூயோர்க்கில் இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்து புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

Comments