எந்த சவால் வந்தாலும், தொகுதிவாரி முறைமையை ஏற்படுத்துவோம் -ஜனாதிபதி


நாட்டில் தற்பொழுதுள்ள விருப்பு வாக்கு முறைமையினால் வேட்பாளர்கள் தங்களது சுயநலனை மாத்திரமே பார்க்கின்றார்கள் எனவும், அவர்களால் நாட்டைப் பற்றி சிந்திக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
வட மத்திய மாகாண சபையிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலிலும், அதனையடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தொகுதிவாரி முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் எதிர்த்த போதிலும் இதனை தான் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தான் கடந்த 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், தொகுதிவாரி முறையை நடைமுறைக்கு கொண்டு வர தேவையான சகல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

Comments