பாதாள உலகக்குழு உறுப்பினர் பத்தா வெட்டிக்கொலை


பாணந்துறை கடற்கரையில் பத்தா என்று அழைக்கப்படும் இந்திக உதயகுமார என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபருக்கும் வேறு சிலருக்கும் இடையில் நேற்று மாலை ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தா என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் சகாக்களுக்கும் வேறு சிலருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தகராறின் பிரதிபலனாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments