க.பொ.த உயர்தர பரீட்சை வினாப்பத்திர வெளியீட்டு சம்பவம் – ஆசிரியருக்கு பிணை
க.பொ.த உயர்தர பரீட்சையின் இரசாயன வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனியார் வகுப்பு ஆசிரியர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இருவரையும் ரூபா 10000 பெறுமதியான பிணையில் ஒரு இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது


Comments
Post a Comment