அசாதாரண காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்
அசாதாரண காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 5 கோட்டக் காரியாலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்தும் நாளை (11) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, அயகம மற்றும் அலபாத ஆகிய பிரதேச கோட்டக் காரியாலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment