கிண்ணியா: டெங்கு ஒழிப்பு கலந்துரையாடல்


கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜீத் தலைமையில் நேற்று(29) டெங்கு ஒழிப்பு தொடர்பான முன்கூட்டிய விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு கலந்துரையாடலின்போது இனிவரும் காலங்களில் மழை காலம் ஆரம்பிப்பதால் அடுத்துவரும் மூன்று மாதகாலத்துக்கான டெங்கு ஒழிப்பு தொடர்பான திட்டங்கள் தொடர்பாகவும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனை கிராம அபிவிருத்திச் சங்கங்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவையும் உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவ் கலந்துரையாடலில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ,பொது சுகாதார உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.

Comments