ஹஜ் குழு நாளை கூடுகிறது
விசாரணை குழுவும் அமைக்கப்படும்
அரச ஹஜ் குழு நாளை வியாழக்கிழமை கூடவுள்ளது. இதன்போது, ஹஜ் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாக ஹஜ் குழு உறுப்பினர் எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்தார்.
அத்துடன், இம்முறை ஹஜ் ஏற்பாடுகளின்போது அசெளகரியங்களை சந்தித்த ஹாஜிகள் எழுத்துமூலமான முறைப்பாடுகளை சமர்ப்பித்தால் மாத்திரமே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் முதற்கட்டமாக ஹஜ்ஜுக்கு செல்ல முடியாமற்போன 35 பேருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை ஹஜ் ஏற்பாடுகள் மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது. எமது நாட்டை பொறுத்தவரை, நாம் நீதிமன் ஹஜ் வழிகாட்டல்களுக்கமையவே ஏற்பாடுகளை செய்திருந்தோம். அதற்கமைய, முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் குறித்தும் வியாழனன்று ஹஜ் குழு கூடி தீர்மானங்களை எடுக்கவுள்ளது.
முக்கியமாக 35 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமற் போனமை சம்பந்தமாக விரிவாக ஆராயவுள்ளோம். பாதிக்கப்பட்ட 35 பேரில் 27 பேர் ஒரே முகவரினூடாக ஹஜ்ஜுக்கு செல்ல பணம் செலுத்தியிருந்தனர். மூவர் மற்றுமொரு முகவரிடம் பணத்தை செலுத்தியதோடு ஐவர் சவூதிக்கு சென்று திரும்பியிருந்தனர். இந்த ஐவர் குறித்த தகவல்கள் அமைச்சுக்கோ திணைக்களத்திற்கோ தெரியப்படுத்தப்படவில்லை. ஆகவே, ஹஜ் முறைப்பாடுகள் தொடர்பாக நியமிக்கப்படவுள்ள குழுவினர் முதலில் விசாரணை செய்யப்படவுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க ஹஜ் குழுவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே இருக்கின்றன. எனினும் சட்டத்தரணிகளின் ஆலோசனையின்படி நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளோம்.
அத்தோடு, ஏனையவர்களும் எழுத்து மூலமாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் ஏற்பட்ட அசெளகரியங்கள் தொடர்பில் நியமிக்கப்படவிருக்கும் விசாரணை குழுவில் முறையிடலாம்.
ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் சட்டத்தரணிகள் அடங்கலான விசாரணை குழுவை நியமிக்கவிருக்கிறோம்.
இது குறித்த விபரங்களை அடுத்த மாத முதல் வாரத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவிருக்கிறோம்.
இதேவேளை, இறுதித் தருணத்தில் இலங்கையருக்கு கிடைக்கப்பெற்ற 600 வீசாக்கள் மூலம் ஹஜ் நிறைவேற்ற சென்றவர்களுக்கு சில அசெளகரியங்கள் ஏற்பட்டன. மினாவில் சில குறைபாடுகள் நிலவின, இதன்போது முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பா அதிகாரிகளுடன் பேசி நிலைமைகளை சுமுகமாக்கினார். இதேவேளை, சவூதியில் அரச ஹஜ்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்களின் அறிக்கைகளும் கலந்துரையாடப்பட்டு வியாழக்கிழமை பல தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். அனைத்து தீர்மானங்களும் ஹாஜிகளின் நலன் பேணுவதாகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகவும் அமையும் என்றார்.

Comments
Post a Comment