பாராளுமன்றத்தில் இன்று விசேட அமர்வு


 விசேட பாராளுமன்ற அமர்வொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 01 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இவ்வமர்வின் போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடாத்துவதற்காக இணைக்கப்பட்ட 3 சட்டமூலங்களை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மாநகர கட்டளை சட்டம், நகரசபை கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை கட்டளை சட்டம் ஆகியன இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, இன்று சமர்ப்பிக்கப்படும் 3 சட்டமூலங்களையும் நிறைவேற்ற எதிர்வரும் 09ம் திகதி மீண்டும் பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதும், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments