யாழ் ஒஸ்மானியாவின் ஆரம்பப்பிரிவு மேலும் மேம்பட நாம் உதவுவோம். அதிபர் திரு ஆர்.சிவலிங்கம்.

n.m. abdullah

யாழ் ஒஸ்மானியாவின் ஆரம்பப்பிர்வினை மேலும் மேம்படுத்த நாம் எமது அனுபவங்களை பகிர்ந்து உதவுவோம் என நு/கொட்டகல தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருவாளர் ஆர்.சிவலிங்கம் (BA, Dip in Edu, Agro Trained, MPhil, PGDEM Merit, SLPS 2-II, MSc REA) அவர்கள் குறிப்பிட்டார்கள். யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் ஆரம்பப் பிரிவினை மேலும் சிறப்பாக ஒழுங்கமைக்கும் நோக்குடன் ஒரு விஷேட வேலைத்திட்டம் குறித்து ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் முன்னைய நாள் அதிபர் ஜனாப் எம்.எஸ்.எம்.அஷ்ரப் மற்றும் புதிய அதிபர் ஜனாப் ஷேஹு ராஜிஹ் ஆகியோருடைய வழிகாட்டுதலோடு  கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்; யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தின் சமூக பொருளாதார சூழ்நிலைகளை ஒத்த நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகல பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொட்டகலை தமிழ் மஹா வித்தியாலயம் அண்மை நாட்களில் பல்வேறு முன்மாதிரி மிக்க செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது, என்ற தகவல்களின் அடிப்படையில் அதன் மாதிரிகளை நேரில் அவதானிக்கும் நோக்கில் ஒரு விஷேட களவிஜயமொன்றினை அண்மையில் மேற்கொண்டிருந்தனர். அந்த விஜயத்தினை நிறைவு செய்யும் நிகழ்விலேயே அதிபர் திருவாளர் ஆர்.சிவலிங்கம் அவர்கள் ஒஸ்மானியா ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்லூரி அதிபர் திருவாளர் ஆர்.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்களவிஜயத்தில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர், இவ்விஜயத்தின்போது கொட்டகலை தமிழ் மஹா வித்தியாலயத்தின் முனாதிரி வகுப்புகள், கவின்நிலை கற்றல் சூழல், ஆரம்பப்பிரிவு வகுப்புகளின் ஒழுங்கமைப்புகள், ஆசிரியர்களுக்கான விஷேட பயிற்சிகள், மாணவர் ஆசிரிய உறவுகள், பெற்றோர் ஆசிரியர் உறவுகள், பாடசாலையின் முன்னேற்றத்தில் பெற்றோரின் பங்கேற்பு, சமூக நிறுவனங்களும், நலன்விரும்பிகளும் பாடசாலைக்கு எவ்வாறான அமைப்பில் ஒத்துழைப்புகளை வழங்குகின்றார்கள் என பல்வேறு விடயங்கள் குறித்தும் நேரில் கலந்தாலோசிக்கப்பட்டது. 

இலங்கையில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுள் இத்தகைய முன்மாதிரிமிக்க ஆரம்பப்பிரிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வி நிலையை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மேற்படி விஜயத்தின்போது சிறீபாத கல்வியியல் கல்லூரிக்கும் ஆசிரியர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி களவிஜயத்திற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தகவல் எம்.எல்.லாபிர்



Comments