மூதூர் அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டமும் . ரோஹிங்யா

தோப்பூர் நிருபர் எ.என்.எம்.புஹாரி -

மியன்மார் ரோகின்ய முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து வெள்ளிக்கிழமை (08) மூதூர் அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டமும் துஆ பிரார்த்தனையும் முன்னடுக்கப்பட்டது.

மூதூர் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரும் கலந்து கொண்டார்.

இதன் போது மூதூர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அரபாத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Comments