கழுதை தேய்ந்து கட்டெறுப்பானது.வட மத்திய மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர் நியமனம்.


ஆரிஃப் எஸ் நளீம்

குறித்த மாகாணத்தை,மாவட்டத்தை பிரநிதிதுத்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகளான.

-இஷாக் ரஹுமான்(ப.உ) -S.H.M.அன்சார் (மா ச) -P.சஹீது (மா ச) - A.R.ஹுசைன்(மா ச) ஆகியோரே இது உங்களின் பொறுப்பள்ளவா?

வடமத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் மொத்த ஆசிரியர் வெற்றிடங்கள்-896(மாகாண கல்வி அமைச்சின் மதிப்பீடின் படி) அது நாளடைவில் 396 ஆக தேய்ந்து இப்போது 190 ஆக வந்து நிற்க்கிறது.அதுவும் கேள்விக்குறியே. இம் மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கை 94 கடமையாற்றும் ஆசிரியர்களின் தொகை 1680.அப்படி பார்த்தால் ஒரு பாடசாலைக்கு 17 ஆசிரியர்கள். இதில் கணிதம் ஆங்கிலம் விஞ்ஞானம் போன்ற முக்கிய பாடங்களை போதிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடு.பெரும் வேதனை என்னவென்றால் இஸ்லாம் பாடத்தை போதிக்க கூட சில பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

தகுதி வாய்ந்தோரை கண்டறிந்து ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுக்கவேண்டியதும்,தமக்கு வாக்களித்த மாவட்ட மக்களின் எதிர்கால சந்ததியினரின் கல்வித் தேவையினை நிவர்த்தி செய்து வைக்கவேண்டியதும் இவ்விரண்டு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான உங்களின் பொறுப்பல்லவா? 
-புள்ளி விபர உதவி ஜவர்ஷா மற்றும் பர்வீன்.

Comments