இந்தியாவில் உள்ள ரோஹிங்யர்கள் ‘தீவிரவாதிகள்’: அரசு
மியன்மாரில் ரோஹிங்யர்கள் விரட்டியடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் உள்ள ரோஹிங்யர்களையும் வெளியேற்ற முயற்சி செய்து வரும் நரேந்திர மோடி நிர்வாகம், நாட்டில் உள்ள ரோஹிங்யர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்யர்கள் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஆயுதக் குழுக்களுடன் அவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் இதனால் தேசிய பாதுகாப்புக்க அச்சுறத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அரசு உச்ச நீதிமன்றுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.
ரோஹிங்யர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற எடுக்கப்படும் முயற்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிலேயே இவ்வாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment