கரடியின் தாக்குதலில் தாயும் மகளும் படுகாயம்
இவ்வாறு கரடித்தாக்குதலுக்குள்ளானவர்கள், அதே இடத்தைச் சேர்ந்த எச்.பிசோ மெனிகா (42 வயது) மற்றும் அவரது மகளான எஸ்.சுனேத்ரா (28 வயது) எனத் தெரியவருகின்றது.
குறித்த இருவரும், அவர்களது வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்று, வீழ்ந்து கிடந்த மரமொன்றை வெட்டிய போது, அம்மரத்துக்கருகில் உறங்கிக்கொண்டிருந்த கரடி, மெனிகாவைத் தாக்கியள்ளது.
இதனையடுத்து, அவரது மகள் கரடியைக் கோடாரியால் தாக்கியுள்ளார். அதேவேளை, கரடி மீண்டும் மகளைத் தாக்கியதாக, பாதிக்கப்பட்ட மகளான எஸ்.சுனேத்ரா, வைத்தியரிடம் தெரிவித்துள்ளார்.
கரடி தாக்குதலுக்குள்ளான தாயும் மகளும், கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே, மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்


Comments
Post a Comment