முஸ்லிம் காங்கிரஸ் வந்த நோக்கம் என்ன..?
முன்பெல்லாம் நமது அரசியல்வாதிகள் இனங்கிய அரசியலின் மூலம் சமூக ஒற்றுமையை பேணிக்கொண்டும், அதேவேளை அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் வெற்றியடைந்தால் அதன் மூலம் சில பல அபிவிருத்திகளையும் செய்து கொண்டும் வந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் தமிழர்களுடை ஆயுதபோராட்டம் வழுப்பெற்று வந்தது. இதன் காரணமாக 13வது திருத்தச்சட்டம் வந்தபோது அதிலே முஸ்லிம்களின் விடயங்கள் கவணத்தில் எடுக்கப்படாமல் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைத்துக் கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்படும்போது அன்று இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜே.ஆருக்கு பயந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள்.
அன்று அதனை எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் அதனை கடுமையாக சாடியிருந்தார். பெரும்பாண்மை கட்சிகளின் சார்பில் தேர்தல் கேட்டு வெற்றியடைந்தவர்கள் அந்த கட்சியின் ஊதுகுழலாகத்தான் இருப்பார்களே தவிர, அவர்களினால் தனித்துவமாக இயங்கமுடியாது என்றும், அதனால் தனித்துவமான முறையில் பாராளுமன்றம் சென்றால்தான் யாருக்கும் கட்டுப்படாமல் சுயமாக நாம் இயங்கமுடியும் என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்தார்.
இந்த பிரச்சாரம் அன்றய காலப்பகுதியில் மக்களுக்கு சரியாகவேபட்டது. அதனால் அரசியலில் பரம்பரையாக காலூன்றி இருந்தவர்களை நிராகரித்து அஸ்ரப்பின் கட்சியான மு.காங்கிரசை மக்கள் ஆதரிக்க துவங்கினார்கள்.
மக்களின் அமோக ஆதரவை பெற்ற மு.காங்கிரஸ் 1994வரை பிரமதாசா ஆட்சிக்காலத்தில் தனித்துவமாக இயங்கி சில காரியங்களை சாதித்து வந்தார்கள். அதன் பின் சந்திரிகாவின் ஆட்சியின் போது, ஆட்சியின் பங்காளி என்ற முறையில் சில அமைச்சு பதவிகளையும், இதர சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இனங்கிய அரசியலை செய்துவர தொடங்கினார்கள், பின்னாலில் சந்திரிக்காவுக்கும் இவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்பட துவங்கியிருந்தது.
இதன் காரணமாக அஸ்ரப் அவர்கள் சந்திரிக்கா அம்மையார் அவர்களுக்கு மக்காவில் இருந்து கொண்டு 48பக்க கடிதம் ஒன்றை மிகவும் கவலையோடு எழுதவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அந்த கடிதத்திலே தங்களை "ஆசை காட்டி மோசம்" செய்து விட்டீர்கள் என்ற கருத்துப்பட அந்த கடிதத்தின் சாரம்சம் அமைந்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக ஆளும் கட்சியை விட்டு வெளியேரும் தீர்மானத்தை எடுக்க முற்பட்டபோதுதான், மர்மமான முறையில் 2000ம் ஆண்டு கெலிக்கெப்டர் விபத்தொன்றில் அஸ்ரப் கொல்லப்படுகின்றார்.
அதன் பின் இணைத் தலைமைத்துவம் என்ற முறையில் தலைவர் அஸ்ரப் அவர்களின் துணைவியாரான பேரியல் அஸ்ரப் அவர்களும், ரஹுப் ஹக்கீமும் அவர்களும் கட்சியின் தலைமையை பங்கிட்டுக்கொண்டார்கள்.
அதன் பின் தங்களின் தலைமைகளை காப்பாற்றிக்கொள்ளும் என்னத்தோடு இரண்டுபேரும் ஆளும் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு அமைச்சு பதவிகளை பெற்று அடிமைகளாக மாறியிருந்தார்கள்.
அதன் பின் இணைத்தலைமை, ஒரு தலைமையாக மாற்றப்பட்டு மு.காங்கிரஸ் கட்சியின் தலைவராக ரஹுப்ஹக்கீம் அவர்கள் தெறிவு செய்ப்பட்டார்கள். அதன் பின் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு எந்தக்கட்சி ஆட்சி அமைக்கின்றதோ அந்த கட்சிகளிடம் சோரம் போய்க்கொண்டு அமைச்சு பதவிகளையும் இதர சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, சமூகம் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை, நமது இருப்பை பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற தான் தோன்றித்தனமான என்னத்துடன் இதுவரை அவர்கள் கட்சியை இழுத்துக்கொண்டு பயணித்து வருகின்றார்கள்.
இதற்கிடையில் அந்த கட்சியைவிட்டு பல காரணங்களினால் வெளியேறி வந்தவர்களும் தனிக்கட்சி அமைத்துக்கொண்டும், ஆட்சியமைக்கும் கட்சிகளுடன் சேர்ந்துகொண்டும், இனங்கிய அரசியலைத்தான் இதுவரை செய்து கொண்டும் வருகின்றார்கள்.
என்ன காரணத்தை சொல்லி அஸ்ரப் கட்சியை ஆரம்பித்தாரோ அந்த காரணங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு, முன்பு இருந்த அரசியல்வாதிகள் செய்த அதே பாணியையத்தான் இப்போது இவர்கள் பின்பற்றி வருகின்றார்கள். அதன் காரணமாக,...
2002ம் ஆண்டு ரணில் பிரபா ஒப்பந்தத்தின் போது ரணிலை எதிர்க்கமுடியாமல் அவர் செய்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார் ரஹுப்ஹக்கீம் அவர்கள். அங்கே தனித்துவம் காற்றில் பறந்தது.
மஹிந்த ஆட்சியில் 18க்கு ஆதரவளித்ததன் மூலம், தனித்துவம் காற்றில் பறந்தது.
தெவிநெகும சட்டம் வந்தபோது அதற்கு ஆதரவு தெறிவித்து தனித்துவத்தை இழந்தார்கள்.
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் முஸ்லிம்களுக்கு பிழையானது என்று கூறிக்கொண்டே அதற்கு ஆதரவாக வாக்களித்து தங்களது தனித்துவத்தை இழந்து கொண்டார்கள்.
20க்கு மாகாணசபையிலே ஆதரவாக வாக்களித்து தங்களது தனித்துவத்தை இழந்து நிற்கின்றார்கள்.
இப்படி பல விடயங்களில் தாங்கள் சார்ந்த அரச தலைவர்களின் கட்டளைக்கு பயந்து செயல்பட்டு வருகின்றார்கள் என்பதே உண்மையாகும். இதுவெல்லாம் மக்களை ஏமாற்றி கட்சி ஆரம்பித்துவிட்டு, சொன்ன கொள்கைக்கு மாற்றமாக நடக்கும் விடயமாகும்.
முன்னய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்தது பிழை என்று கூறிச்சென்றவர்கள் இப்போது அதைவிட மோசமாக "ஒட்டுண்ணிகளாக" செயல்பட்டு பல உரிமைகளை இழந்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
இவர்களுடைய செயல்பாடுகள் சமூகத்தையும் குழப்பி தங்களையும் குழப்பி ஏமாற்றுநாடகம் ஆடுகின்றார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து, இவர்களுடைய செயல்பாடுகளுக்கு தக்கபாடம் படிப்பித்து கொடுக்காதவரை, இவர்களின் காட்டில் மழைதான்.
எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.


Comments
Post a Comment