இறைச்சி உண்ணும் விநாயகர்! அவுஸ்திரேலியாவில் கண்டனப் பேரணி


இந்துக் கடவுளான விநாயகர், ஆட்டிறைச்சி உண்பது போல வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் ஏராளமான இந்துக்கள் கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள இந்துக்களால் குறித்த உள்ள கண்டன பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்துக் கடவுளான விநாயகர் மற்றும் பல்வேறு மதங்களை சேர்ந்த கடவுள்கள், ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.

இந்த விளம்பரத்திற்கு இந்து அமைப்புகள் (ஐ.எப்.ஏ) கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த விளம்பரத்தை தடை செய்யவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த கண்டன பேரணி நடத்தப்பட்டுள்ளது.

Comments