கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி

(கல்முனையூர் அப்ராஸ்)

அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் நடாத்தும் “பறக்கத் டெக்ஸ் மின்னொளி உதைபந்தாட்ட சமர்-2017” இறுதிப் போட்டி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் மற்றும் சனிமௌண்ட் விளையாட்டுக் கழகம் என்பன மோதின.

இதில் 2-0 என்ற கோல் கணக்கில் கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக்கழகம் வெற்றி வாகை சூடியது.

Comments