மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது கிண்ணியாவில்
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மரங்களை வெட்டிய சந்தேக நபரொருவரை இன்று (07) காலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- புதுக்குடியிருப்பு சஹாப்தீன் ரபீக் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதிப்பத்திரமின்றி மரங்களை வெட்டி தம் வசம் வைத்திருப்பதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சோதனைகளை மேற்கொண்ட போது மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட மரக்குற்றிகளுடன் சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment