ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளை கண்டித்து அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றதுடன், இதன்போது வன்முறைகளால் பாதிப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Comments
Post a Comment