நமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யார்? நாமலுக்கு ஏற்பட்ட சந்தேகம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்திற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியுடன் ஏன் செல்லவில்லை என நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துள்ளார்.
எனினும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜனாதிபதியின் இந்த பயணத்தில் கலந்துகொள்ளவில்லை.
“ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திற்கு ஜனாதிபதியுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் செல்லாதது ஏன்? உண்மையில் நமது வெளியுறவுக் கொள்கையை கையாள்வது யார்?” என நாமல் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/hashtag/UNGeneralAssembly?src=hash


Comments
Post a Comment