ஜனாதிபதி கட்சியிலுள்ள சிலருடன் அவசர சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு முக்கிய உறுப்பினர்களுடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டதாக பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தில் செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பிலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Comments
Post a Comment