கல்­மு­னையை தனி மாவட்­ட­மாக பிர­க­டனம் செய்­யா­விட்டால் எனது பத­வியை துறப்பேன்

பாரா­ளு­மன்றில் ஹரீஸ் சூளுரை

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி அறிக்­கையில் கல்­மு­னையை தனி மாவட்­ட­மாக பிர­க­டனம் செய்­யா­விட்டால் குறித்த இறுதி அறிக்­கைக்கு வாக்­க­ளிக்­காது எனது பிரதி அமைச்சு பத­வியை துறந்து விடுவேன் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பிரதி அமைச்­ச­ரு­மான ஹரீஸ் சபையில் சூளு­ரைத்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம் மக்­களும் எம்.பிக்­களும் துணை போக­மாட்­டார்கள். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தடம்­பு­ரண்டு செயற்­பட்டு வரு­கின்­றது. இதன் கார­ண­மாக கிழக்கு இளை­ஞர்கள் கூட்­ட­மைப்பின் மீது விரக்தி கொண்­டுள்­ளனர். எனவே கிழக்கில் மக்­களை அணி­தி­ரட்டி போராடி வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை மீள ஒப்­ப­டைத்தல் சட்­டத்தின் கட்­ட­ளைகள், ஏற்­று­மதி சட்ட மூலத்தின் கட்­ட­ளைகள் மீதான விவாத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,  சுதந்­திர கட்­சியும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுமே வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தை எதிர்த்து வரு­கின்­றன. இது எமக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­கி­றது. 

வடக்கு கிழக்­கையும் இணைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு திட்­ட­மிட்டு வரு­கின்­றது. இந்த திட்­டத்­திற்கு நாம் ஆத­ரவு வழங்­க­மாட்டோம். தமிழ் மக்­க­ளுக்­கான 60 வருட போராட்­டத்திலிருந்து தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தடம்­பு­ரண்டு செயற்­ப­டு­கின்­றது. வேறு திசையை நோக்கிப் பய­ணித்து கொண்­டுள்­ளது.

தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் தலைவர் செல்­வ­நா­யகம், சிவ­சி­தம்­பரம் போன்றோர் கிழக்கு மக்­க­ளுக்கு தனித்த பய­ணித்­திற்கு இட­ம­ளிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­தனர். எனினும் தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நிலைப்­பாடு மாற்றம் கண்­டுள்­ளது. 
எனவே, வடக்கு கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம் மக்­களோ, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ துணை­போக மாட்­டார்கள். இது தொடர்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் பல முறை பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளன. இந்­நி­லையில் கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு கூட்­ட­மைப்பின் செயற்­பாடு அதி­ருப்தி அளிக்­கின்­றது. மேலும் இதன்­கா­ர­ண­மாக நாம் கூட்­ட­மைப்பின் மீது நம்­பிக்கை இழந்து விட்டோம். எமது இளை­ஞர்கள் விரக்­தி­யுடன் உள்­ளனர். 

வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் சுதந்­திர கட்­சி­யி­னதும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யினர் நிலைப்­பாட்டின் மீது நாம் நம்­பிக்கை வைத்­துள்ளோம். அதுவே எமக்கு நம்­பிக்கை ஒளி­யாக தெரி­கின்­றது. எனவே வடக்கு ,கிழக்கு இணைப்பு எதி­ராக கிழக்கில் மக்­களை அணி­தி­ரட்டி போராடி வடக்கு கிழக்கு இணைப்பு இடமளிக்க மாட்டோம்.

அத்துடன் புதிய அரசியலமைப்புக்கான இறுதி அறிக்கையில் கல்முனையை தனி மாவட்டமாக பிரகடனம் செய்யாவிட்டால் குறித்த இறுதி அறிக்கைக்கு வாக்களிக்காது எனது பிரதி அமைச்சு பதவியை துறந்து விடுவேன் என்றார். 

Comments