உளவு பார்த்த குற்­றச்­சாட்டு சவூதியில் அறிஞர்கள் கைது

ஹஸன் இக்பால்

சவூதி அரே­பி­யாவில் பிர­பல இஸ்­லா­மிய அறி­ஞர்கள் உள்­ள­டங்­க­லாக சுமார் 20 பேரை அந்­நாட்டு அரசு கைது செய்து தடுத்து வைத்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. 


கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் சவூ­தியின் மத­கு­ரு­மார்கள்  பலரை கைது செய்து தடுத்து வைத்­துள்­ளமை தொடர்பில் சமூக ஆர்­வ­லர்­களால் குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே மேலும் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.


சவூதி அரசின் உள்­நாட்டு விவ­காரம் தொடர்பில் உளவு பார்த்­தமை, இஹ்­வானுல் முஸ்­லிமீன் அமைப்பு உட்­பட சவூதி அர­சினால் “தீவி­ர­வாத அமைப்­புக்கள்” என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குழுக்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த உல­மாக்கள், இஸ்­லா­மிய அறி­ஞர்கள், மத­கு­ரு­மார்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக சவூதி பாது­காப்பு தரப்­பினர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை நிறு­வ­னத்­துக்கு தெரி­வித்­துள்­ளனர். 


கடந்த திங்­கட்­கி­ழமை சவூதி அரசு மத­கு­ரு­மார்கள், கல்­வி­யி­ய­லா­ளர்கள், தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பா­ளர்கள் மற்றும் கவி­ஞர்கள் உட்­பட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்­துள்­ள­தாக  லண்­டனை அடிப்­ப­டை­யாக கொண்ட சவூதி மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. 


கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் விப­ரங்கள் முழு­வ­து­மாக  வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனினும் சல்மான் அல் அவ்தா, அவாத் அல் கர்ணி, பர்ஹான் அல் மாலிகி மற்றும் முஸ்­தபா ஹஸன் ஆகிய இஸ்­லா­மிய அறி­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என சவூதி மனித உரிமை கண்­கா­ணிப்­ப­கத்தின் தலைவர் யஹ்யா அல் அஸ்ரி தெரி­வித்­துள்ளார். 
சுமார் 90,000 உல­மாக்­களை உறுப்­பி­னர்­க­ளாக கொண்ட  “சர்­வ­தேச முஸ்லிம் உல­மாக்கள் ஒன்­றியம்” உல­மாக்­களின் கைது தொடர்­பான சவூதி அரசின் நட­வ­டிக்­கை­களை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது.


நாடு­க­ளுக்­கி­டை­யி­லான அர­சியல் நெருக்­க­டி­களில் இஸ்­லா­மிய அறி­ஞர்­களை பகடைக் காயாக்­கு­வது கூடாது எனவும், கைது செய்­யப்­பட்­டுள்ள சவூ­தியின் இஸ்­லா­மிய அறி­ஞர்­களை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் எனவும் சவூதி மன்னர் சல்மானிடம் மேற்படி அமைப்பு கோரியுள்ளது. 


கைது செய்யப்பட்டவர்களில் சல்மான் அல் அவ்தா எனும் இஸ்லாமிய அறிஞர் சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களில் ஒருவராவார் என தெரிவிக்கப்படுகிறது. 

Comments