கருத்து வேறு­பா­டுகள் தொடர்­வதால் தனியார் சட்டம் தாமதம்


முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தத்­திற்­கான சிபா­ரிசு அறிக்கை தயா­ரிப்­பதில் தாமதம் ஏற்­பட முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­களில் இன்னும் கருத்து வேறு­பா­டுகள் தொடர்­வதே காரணம் என உயர்­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்தார். 

இதே­வேளை, எதிர்­வரும் 17 ஆம் திகதி கட்­டாய கூட்­ட­மொன்று இடம்­பெ­ற­வி­ருக்­கி­றது. இதில் இறுதித் தீர்­மா­ன­மெ­டுப்­ப­தற்­கான சாத்­தி­யங்கள் அதிகம் இருப்­ப­தாக அவர் மேலும் தெரி­வித்தார். 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தத்தை மேற்­கொள்­வ­தற்கு சிபா­ரி­சு­களை அறிக்­கை­யி­டு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலைவர் விடி­வெள்­ளிக்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில், 

முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தத்­திற்­கான சிபா­ரிசு அறிக்கை பூர்த்தி செய்யும் பணிகள் தீவி­ர­மா­கவே இடம்­பெற்று வரு­கின்­றன. எனினும், பல தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­களை உள்­ளீர்ப்­பதில் குழு உறுப்­பி­னர்­க­ளி­டையே பல்­வேறு கருத்து முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இதனால், சில தாம­தங்கள் ஏற்­ப­டு­கின்­றன. எனினும் நீண்டு நாட்­க­ளுக்கு இதனை தொடர முடி­யாது.

எனினும், இது முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மையை நீண்ட காலத்­திற்கு பேணும் வகையில் அறிக்­கை­யி­டப்­ப­ட­வேண்­டி­யி­ருப்­பதால் அவ­ச­ர­மாக முடி­வெ­டுத்­து­விட இய­லாது. 

இந்­நி­லை­யி­லேயே, எதிர்­வரும் 17 ஆம் திகதி கட்­டாயக் கூட்டமொன்று நடத்தவிருக்கிறோம். இதில் குறித்த சிபாரிசு அறிக்கையை இறுதி செய்து, உறுப்பினர்களிடையே கையொப்பம் பெறவிருக்கிறோம் என்றார்.

Comments