கிண்ணியாவில் வாளோடு நடமாடிய நபர் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் தடை செய்யப்பட்ட கூரிய வாலொன்றினை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (23) காலை 11.00மணியளவில் இளைஞனொருவனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இளைஞனை விசாரணை செய்த போது அவரிடம் மறைத்து வைக்கப்ட்டிருந்த நிவையில் கூறிய வாலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச்சேர்ந்த சதக்கத்துல்லாஹ் முகம்மது றினாஸ் 925வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கைப்பற்றப்பட்ட வாலுடன் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment