சரத்பொன்சேகாவை கிண்டலடித்த மகிந்த!
ஒருவரின் புன்னியத்தினால் நாடாளுமன்றத்துக்கு வந்த சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை யாரும் கொண்டுவருவார்கள் என நான் நினைக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரண குணவர்தனவின் சுகதுக்கம் விசாரிக்க மஹிந்த ராஜபக்ஷ இன்று சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
இதன்போதுஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் தாங்கள் அவருக்கு எதிராக வாக்களிப்பீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதில் வழங்கிய மகிந்த, ஒருவரின் புன்னியத்தினால் நாடாளுமன்றத்துக்கு வந்த சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை யாரும் கொண்டுவருவார்கள் என நான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
மக்கள் ஆதரவு இல்லாதவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையில்லை: மகிந்த
மக்கள் ஆதரவு இல்லாத அமைச்சர்களில் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிடம் நலன் விசாரித்து விட்டு திரும்பும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போருக்கு புறம்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் தேவையேற்பட்டால் அவருக்கு எதிராக சாட்சியமளிக்க தயார் எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.


Comments
Post a Comment