மியன்மார் ரோஹியங்க முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து சாத்வீக போராட்டம்
மியன்மார் ரோஹியங்க முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து சாத்வீக போராட்டம் ஒன்று இன்று (01) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெற்றது.
இதனை கிண்ணியா உலமா சபை ,மஜிலிஷ் சூரா சபை ,பள்ளிவாசல்கள் ஒன்றியம் ,இளைஞர் அமைப்புக்கள் ,மற்றும் நலன் விரும்பிகளினால் இதற்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. கிண்ணியாவில் பல பகுதிகளில் இருந்தும் பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்காளான அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எஸ். தௌபீக், கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஹில்மி மஹ்ரூப், உதவி தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீப் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி இருந்ததோடு பின்வரும் கோஷங்களை எழுப்பினர்.
"நிறுத்து நிறுத்து படுகொலையை நிறுத்து"
"சர்வதேசமே விழித்தெழு, அநீதிக் கெதிராக ஒன்று படுவோம்",
"முஸ்லிம்கள் ஒன்று படுவோம்"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச மனித உரிமை தாபனம், மியான் மார் தூதரகம், ஐ.நா.சபை போன்றோருக்கு எழுதப் பட்ட மகஜர்கள் உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக இதன்போது கையளிக்கப் பட்டன. கிண்ணியாய் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ரியாத் இதனைக் கையேற்றார்
இறுதியாக பிராத்தனை இடம்பெற்றது






Comments
Post a Comment