புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் என் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரையும் மனமார வாழ்த்துகின்றேன்-இம்ரான் MP
Ihzana Fareed
புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் என் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரையும் மனமார வாழ்த்துகின்றேன்.என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.பாராளுமன்ற ஊறுப்பினர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது
வெளிநாடுகளிலும் தாய்நாட்டிலும் ஈதுல் அழ்ஹா ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அன்பர்களின் குடும்பத்தினர்இ உறவினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் மழை பொழிய வேண்டும்இ அவர்களது உள்ளங்கள் அமைதி காண வேண்டும்இ இறை கருணையில் அவர்கள் நனைய வேண்டும் என்று ஏக வல்ல ரஹ்மானை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்.
தியாகம் சுமந்த இப்புனித நாளில் எம் உம்மத்தின் உடலில் பல பாகங்கள் வலிகளை அனுபவிப்பதை அறிகின்றோம்.அநியாயத்துக்கும் அத்துமீறல்களுக்கும் இன்னோரன்ன கொடுமைகளுக்கும் ஆளாகி இருக்கும் எமது அந்த உறவுகளுக்கு விடிவை வேண்டி பிரார்த்திப்பதுடன் எம்மாலான உதவிகளை செய்யவும் கடமைப்பட்டிருக்கின்றோம். அநியாயக்காரர்கள்இ அராஜகம் புரிபவர்கள்இ மனிதத்தை மதிக்காதவர்கள் ஒழிய வேண்டுமென்ற அவா எம் ஒவ்வொருவரதும் உள்ளத்தில் இறைநம்பிக்கையின் உணர்வொளியாக ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. இறை நியதிப்படி அந்த எண்ணம் வீண்போகாது என்பதை நாம் இறை நேசர் இப்ராஹீம் (அலை) அவர்களது வாழ்வியலில் இருந்து பாடம் பெற வேண்டும்
எமது மார்க்கம் முழு மானிட சுபீட்ஷத்துக்குமானது, அனைவரதும் நல்வாழ்வுக்குரியது என்ற தூதை சகோதர சமூகங்களுக்கு எத்தி வைப்பதில் நாம் பெரும் குறையை செய்திருக்கின்றோம். சமுக இ அரசியல் மற்றும் கலாசார வழிகளில் அந்த தூதை எத்திவைப்பதனூடாக எமக்கு ஏனைய சமூகங்களுடனான அழகிய சகவாழ்வை நிலைப்படுத்த முடியும். அவ்வாறான சமூகங்களுக்கிடையிலான உறவு பலப்படும் போது இன்று மியன்மாரில் நாம் காண்பது போன்ற அபாய நிலை எமக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை புரிந்து அதற்கான செயற்திட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும்.
இத்திருநாட்டில் அனைவரும் யாசிக்கும் நல்லாட்சி அதன் பூரண வடிவில் நிலைபெற நாம் நமது பங்களிப்பை செய்ய வேண்டும். வறுமை ஒழிய இ வேலையின்மை நீங்கஇ சகலரதும் உரிமைகள் பாதுகாக்கப் படஇ அனைவருக்கும் சுபீட்ஷமான நல்வாழ்வு நிலைபெற இந்த சிறப்பான தருணத்தில் இறைவனிடம் கையேந்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் இது போன்ற நன்னாளை நற்சுகத்தோடும் சுபீட்ஷத்தோடும் நல்லருளோடும் மீண்டும் மீண்டும் வந்தடையச் செய்வானாக.
எம்மையும் உங்களையும் அவன் பொருந்திக் கொள்வானாக.
ஈத் முபாரக் - இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்

Comments
Post a Comment