வீடியோ).,SLMC யின் தலைமை கல்குடாவிற்கு தண்ணி காட்டி விட்டு தண்ணீர் கொடுத்துள்ளது… முன்னால் போராளி சம்மூன்

Ihzana Fareed

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் அதன் போராளிகளும் கல்குடாவிற்கு தூய குடி நீரினை வழங்கி விட்டோம் என கூறித்திரிகின்ற விடயமானது அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கல்குடாவிற்கு தண்ணி காட்டி விட்டு பாசிக்குடாவிற்கு தண்ணீர் கொடுத்துள்ளார் என முஸ்லிம் காங்கிரசின் முன்னால் தீவிர செயற்பாட்டாளரும், பிரதேச சபை வேட்பாளரும், தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் பங்காளியுமான சம்மூன் மேற்கண்டவாறு தெரிவிக்கின்றார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த சம்மூன் கல்குடாவிற்கு தற்பொழுது ரவூஃப் ஹக்கீமினால் வழங்கப்பட்டுள்ள குடி நீரானது உன்னிச்சை குளத்திலிருந்து நேரடியாக பாசிக்குடாவிற்கு குடி நீர் வழங்கப்படுவதற்கான திட்டமாகும். அதனை வாழைச்சேனை காகித ஆலையில் இருக்கின்ற வாகனேரி தூய குடி நீர் குளாய்களுடன் இணைத்து கல்குடாவிற்கு தூய குடி நீரினை வழங்கி விட்டோம் என தண்ணி காட்டி இருக்கின்றார் தலைவர் ரவூஃப் ஹக்கீம். இது அரசியலில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் எனும் கருத்திற்கு ஒப்பான செயலாகும். அதனால்தான் நான் கூறினேன் தலைவர் ஹக்கீம் கல்குடா மக்களுக்கு தண்ணீயும் காட்டிவிட்டு பாசிக்குடா ஹோட்டல்களும் தண்ணீரும் வழங்கியுள்ளர்.
மேலும் குறித்த கல்குடாவிற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைமையினல் வழங்கப்பட்டுள்ள தூய குடிநீர் சம்பந்தமாகவும், அதனால் எவ்வாறான அனுகூலங்கள், பாதிப்புக்களை மக்கள் எதிர் காலத்தில் அடைய போகின்றார்கள், தூர நோக்கு சிந்தனையுடன் எவ்வாறாண குடிநீர் திட்டத்தினை கல்குடாவில் முன்னெடுக்க வேண்டும், இவ்வாறான திடீர் வழங்குகின்ற செயற்பாடுக்களை எதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாவில் முன்னெடுத்து வருகின்றது.? போன்ற விடயங்கள் சம்பந்தமாக சம்மூன் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

Comments