கல்முனை மாநகரத்தை 04 அலகுகளாக பிரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஏ.பி.எம்.அஸ்ஹர், கல்முனையூர் அப்ராஸ், எஸ் .எல். அப்துல் அஸீஸ்

கல்முனை மாநகரத்தை 04 அலகுகளாக பிரிக்கக் கோரி கல்முனைப்பிரதேசத்தில் இன்று அமைதிப்பேரணியொன்று இடம் பெற்றது.

கல்முனை அனைத்துப்பள்ளிவாயல்கள் சம்மேள்னத்தினால் எற்பாடு செய்யப்பட இப்பேரணி கல்முனைக்குடி முஹைதீன் ஜும் ஆப்பள்ளிவாயல் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கல்முனை பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

இன்றுகாலை ஆரம்பமான இப்பேரணியில் பல்லாயிரக்கணககான பொதுமக்கள் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்திச்சென்றனர்.

ஜனாதிபதி பிரதமர். மற்றும்.உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக அர்சாங்க அதிபரின் பிரதிநிதி ஊடாக மகஜர் ஒன்றும் பிரதேச.செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு கல்முனை வர்த்தக சங்கத்தினரும் தமது கடைகளை மூடி இப்பேரணில் கலந்து கொண்டனர் .

இதனால் பிரதேச செயலக மற்றும் மாநகர சபை நடவடிக்கைகளுக்கும் தடங்கள்கள் ஏற்பட்டதுடன் போக்குவரத்துக்க்ளும் சில மணி நேரம்.ஸ்தம்பித்தது.






Comments