ரோஹிங்ய அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் பலர் பலி – 10 சிறுவர்களின் உடல் மீட்பு


ரோஹிங்ய அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 12 பேர் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 100 பேர் அடங்கிய குறித்த படகு பங்களாதேஷ் எல்லையில் நாப் ஆற்றுக்கு அருகில் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
10 சிறுவர்கள், ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியன்மார் ராகெய்ன் மாநிலத்தில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக பங்களாதேஷ் நோக்கி பலர் இடம்பெயர்ந்து வரும் நிலையில் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments