14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்
தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை அடுத்த மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா இன்று(29) உத்தரவிட்டார்.
தெழுங்கு நகர்,புதுக்குடியிருப்பு,தம்பலகமம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: குறித்த சந்தேக நபரின் மனைவி வெளியில் சென்றுள்ளார்.அவ்வேளையில் பக்கத்து விட்டு சிறுமியொருவர் சந்தேக நபரின் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் வீட்டுக்குள் வந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற நிலையில் சிறுமி கத்திக்கொண்டு தனது தாயிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்தே சந்தேகநபரை நேற்று(28) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை பொலிஸார் இன்று (29) கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment