மின்சாரம் தாக்கி மாணவி பாத்திமா ஹனா (15) பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் விபரம்.
கல்முனை மகளிர் பாடசாலை யொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15வயது சிறுமி ஒருவர் கெக்கிாவ ஹோராப்பொலயி லுள்ள தனது வீட்டில் வகுப்புப் பாடங்களை மீட்டிக் கொண்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை இரவு 11மணியளவில் இத்துரதிர்ஷ்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ஹோராப்பொலயை வசிப்பிடமாகக் கொண்ட நஜீப்கான்
பாத்திமா ஹனா (15) என்ற இச்சிறுமி தனது அறைக்குள்ளிருந்த மின் விசிறியை சீர் செய்வதற்கு முயன்ற வேளையில், மின் ஒழுக்குக் காரணமாக இவர் மின் தாக்கத்திற்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை களிலிருந்து தெரியவந் துள்ளது.
மின்சாரத் தாக்கத்திற்குள்ளாகிய இச்சிறுமி தம்புள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவேளையில் அவர் உயிரிழந்து காணப் பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன
கல்முனை மகளிர் பாட சாலை விடுதியிலிருந்து
வீட்டுக்கு வந்த நிலையில், டெங்கு நோயினால் இவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த தாகவும், பின்னர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியர்களின் ஆலோசனைக்கு இணங்க கடந்த இரண்டு மாத காலமாக இவர், ஹோராப்பொல்வி லுள்ள தனது வீட்டில் ஓய்வு பெற்று வந்ததாகவும், கெக்கிராவ பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியையான இச் சிறுமியின் தாய் தெரிவித்தார்.
மகள் பாத்திமா ஹனா,வீட்டில் ஓய்விலிருந்த காலத்தில் தமக்குத் தவறிப் போயிருந்த பாடங்களை கற்றதாகவும், சம்பவ தினத் தன்றும் அவர் பாடங்களை படித்துக்கொண்டிருந்தவாறு அறையிலிருந்த மின் விசிறி காற்றின் அளவை சீர் செய்யும் முயற்சியிலிடுபட்டிருந்த வேளையில் மின்சாரம் காவுகொண்டு விட்டதா கவும் அவரது தாய் மேலும் தெரிவித்தார்.


Comments
Post a Comment