ரொஹிங்கிய முஸ்லிம்களின் துயர் துடைக்க சவூதி மன்னர் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதை பெரிதும் வரவேற்கிறோம்.


இடம்பெயர்ந்து பலவித துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள ரொஹிங்கிய முஸ்லிம்களின் துயர் துடைக்கவென சவூதி அரேபிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸிஸ் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதை பெரிதும் வரவேற்பதாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் பிரதி பொதுச் செய லாளர் மெளலவி எம். எஸ். எம். தாஸிம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

 உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இடம்பெயர்ந்துள்ள ரொஹிங்கிய முஸ்லிம்கள் அனுபவிக்கும் துன் பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.


இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தமது அறிக்கையில் விடுத் துள்ள மனிதாபிமானக் கோரிக்கை யில் 10 வீதத்தை நிறைவேற்றும் நோக்கில் மன்னர் ஸல்மான் இந் நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதற்குத் தேவையான உத்தரவை அவர் நிவாரணம் மற்றும் மனிதாபிமானத் திற்கான ஸல்மான் மையத்திற்கு வழங்கியுள்ளார்.

அத்தோடு சவூதியின் மனிதாபி மான சேவைகள் தொடரும் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இது பெரிதும் வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கது மான நடவடிக்கையாகும்.

அதேநேரம் பாதிக்கப்பட்டுள்ள ரொஹிங்கிய முஸ்லிம்களின் துன்ப துயரங்களைத் துடைக்கவென சவூதி அரேபியா ஆரம்ப காலம் முதல் உதவி ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றது. இடம்பெயர்ந்த ரொஹிங்கிய முஸ்லிம்களில் ஒரு தொகையினரைத் தம் நாட்டிலேயே தங்க
வைத்தும் அந்நாடு பராமரித்து வருவதும் தெரிந்ததே.

சகல மக்களையும் மனிதாபிமான கண்கொண்டு நோக்கும் சவூதி அரே பியாவின் மனிதாபிமான சேவைக ளில் இவையும் ஒரு பகுதியே.
இதேவேளை இடம்பெயர்ந்துள்ள ரொஹிங்கிய குழந்தைகள் நரகத்தை எதிர் கொண்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தளவுக்கு மோசமான நிலைமையை இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான ரொஹிங்கிய குழந்தைகள் எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் மன்னர் சல்மானின் இந்த நிதியொதுக்கீடு ரொஹிங்கிய மக்களுக்கு ஒரு ஆறு தலாகவும் நிவாரணமாகவும் இருக் கும் என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

Comments