2000ம் ஆண்டய தீர்வுத்திட்டத்தில் அஸ்ரப் தென்கிழக்கை கோரினாரா.?


2000ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி சந்திரிக்காவின் ஆட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தில், மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கில் "தென்கிழக்கு" மாகாணசபையை கோரியிருந்தார் என்று பிரபல அரசியல்வாதிகள் தொலைக்காட்சி விவாதங்களிலும், பத்திரிகைகளிலும் பகிரங்கமாகவே கூறிவருவதைக் காண்கின்றோம்.

அந்த அரசியல்யாப்பை நாம் கவணித்தால், அதிலே தென்கிழக்கு அலகு கோரிக்கையையப் பற்றி எதுவுமே குறிப்பிடப்பட்டதாக அவதானிக்க முடியவில்லை.
மாறாக வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டே இருக்கவேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த அரசியல் யாப்புத் திருத்தத்தில் அஸ்ரப் அவர்கள் இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் தென்கிழக்கு அலகை கோரியுள்ளார் என்ற வசனத்தை காண்பிப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு (ஒரு மில்லியன் ரூபா) பணப் பரிசை வழங்குவதற்கு  நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

நிரூபிக்க முடிந்தவர்கள் அதனை நிரூபித்துக்காட்டி விட்டு இந்த பணத்தொகையை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

Comments