அதிவேக பாதையில் பயணித்த பஸ்ஸி்ல் இன்று காலை தீ
தெற்கு அதிவேக பாதையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவம் ஒன்று இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
கடுவெல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியே கஹதுடுவ எனும் இடத்தில் இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
தீயணைப்புப் பிரிவினரால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும், தீக்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Comments
Post a Comment