பங்களாதேஷில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரோஹிங்ய குழந்தைகள் அவதி- யுனிசெப்
மியான்மரிலிருந்து பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ள 6 லட்சம் ரோஹிங்யா அகதிகளில் 3,40,000 ரோஹிங்யா குழந்தைகள் கடுமையான பாதிப்புக்களுக்கு முகம்கெடுத்துள்ளதாக ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மியான்மரிலிருந்து பங்களாதேசம் வந்துள்ள 6 லட்சம் ரோஹிங்ய அகதிகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் போதுமான உணவின்றி, தண்ணீரின்றி, முறையான பொது சுகாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
இப்பிரச்சினை குறுகிய காலத்திலோ மிக விரைவாகவோ தீர்க்க முடியாதது. 5 வயதுக்குக் கீழ் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளதாகவும் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


Comments
Post a Comment