*திருமலை சகோதரத்துவத்துக்கான அமைப்பு*


நமது முஸ்லீம் தலமைத்துவங்கள் நம்மை அடமானம் வைத்து நடாத்துகின்ற வங்குரோத்து அரசியலை நிறுத்துவது கடினமான ஒன்றாகிவிட்டது.

இருந்தும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகமான முஸ்லீம்கள் வாழ்ந்த போதும் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளோம்.

ஒருபுறம் மாவட்டத்தில் சிங்களப் பேரினவாதம் மறுபுறம் தமிழ் தீவிர சக்திகளின் அடக்குமறைகளால் இடையில் சிக்குண்டு சிதறடிக்கப்படுகிறோம்.

நமக்கான இருப்பு,அந்தஸ்து மற்றும் தனித்துவம் இன்று விலைபோன ஒன்றாகிவிடடது.

உள்ளூர் அரசியல்வாதிகளின் பிற்போக்கானதும் உழைப்பையோ நோக்கமாக கொண்டு நடாத்துகின்ற குடும்ப அரசியலால் எதிர்காலத்தை சூன்யமாக்கியுள்ளோம்.

அரசியலை எதிர்க்கின்றவர்கள்,விமர்சிக்கின்றவர்கள் மற்றும் முற்போக்கான படித்த இளைஞர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம் அல்லது சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுகிறோம்.

அபிவிருத்திகள் எல்லாம் கமிஷனை இலக்குவைத்தும் தனக்கு தேர்தலில் செலவுசெய்யும் கொந்தராத்து மூட்டைப் பூச்சிகளை இலக்காக வைத்தே நகர்த்தப்படுகிறது.

மாவட்டத்தின் சகல முஸ்லீம் பிரதேசங்களிலும் பிரதேசவாதமும் குட்டித் தலைவர்களின் அதிகரிப்பும் நம்மை நமக்கே எதிரிகளாக்கியுள்ளது. உலகமுஸ்லீம்களுக்காக கண்ணீர் சிந்தும் நம்மால் பக்கத்து வீட்டு முஸ்லீமின் உணர்வுகளை புரியமுடியாதுள்ளது.

மார்க்கத்தை பேசுபவர்கள்,மார்க்கம்சார்ந்த சபைகள் எல்லாம் அரசியல்மயமாகி விளம்பரம் தேடும் அமைப்பாகிவிட்டது.தலமைத்துவக் கட்டுப்பாடும் சமூக ஒற்றுமையும் சீர்குழைந்துள்ளது.

முற்போக்காக எழுதும் பேசுகின்றவர்கள் எல்லாம் காலத்துக்காலம் மட்டும் வந்துபோகும் ஈசல்பூச்சிகளாகவே உள்ளது.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.இது மிகவும் கடினமானதும் சவால்கள் நிறைந்ததுமான பயணம்.ஏனெனில் மனித நோயமற்ற நடமாடும் மிருகங்களோடு மோதவேண்டிய போராட்டம்.

இருந்தும் எவரேனும் ஆரம்பித்து வைத்தை ஆகவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.ஆகவே தீக்குச்சியாக உருமாறியாக வேண்டும்.

இந்த நிலையில் மாவட்ட முஸ்லீம்களை தமித்துவமிக்கவர்களாகவும் பலமான கட்டமைப்புடனும் ஒன்றிணைக்க பயணத்தை இன்ஷா அல்லாஹ் ஆரம்பித்துள்ளேன்.

பல்வேறு ஆய்வுகள்,கருத்துப் பறிமாறல்கள் மற்றும் நீண்டகால சிந்தனை ஓட்டத்தின் விளைவாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன்.இறைவன் துணை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

அந்தவகையில் மாவட்ட முஸ்லீம் பிரதேசங்களில்
1-பிரதிநிதித்துவம்
2-அபிவிருத்தி

ஆகியவற்றை சமமானதும் சாத்டியமானதுமான முறையில் பங்கீடும் பகிர்ந்தளிப்பும் செய்து நமக்கான பலமிக்க சமூககட்டமைப்பை உருவாக்குவோம்.

நம்மை பகடக்காய்களாகவும்,நமது மண்ணை அரசியல் விபச்சார மடமாகவும் மாற்றிய துரோகிகளை வெளியேற்றுவோம்.எங்கள் வாக்குகளால் தேசியப்பட்டியலும்,அமைச்சரவை பதவியும் சுகபோகமும் அனுபவிக்கும் வழிப்போக்கு அரசியல்வாதிகளை துரத்தி அடிப்போம்.

தேசிய கட்சிகள் மற்றும் தேசிய அரசியலில் பங்காளர்களாக இருப்போம்.உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தலில் மாவட்டத்தில் தனித்துவமாக நின்று நமக்கான பேரம்பேசும் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்.

ஆகவே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மண்ணையும் மக்களையும் மீடகும் பயணத்தில் உங்கள் கருத்துக்கள்,ஆதரவுமற்றும் ஆரோக்கியமான விமர்சனங்கள் அவசியமாகும்.

நம்க்கான அரசியல்
நமது மண்ணில்
நம்மாலே முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமது இலட்சியங்கள் மற்றும் கனவகள் மீது எவரையும் சவாரிசெய்யவும் நாட்டாமை செய்யவும் இனிமேல் அனுமதிக்கமுடியாது.

அடிவாங்கியதும்
அடிமையாக வாழ்ந்ததும் போதும்
திருப்பி அடிப்போம்.

ஆகவே இனிவரும் காலங்களில் எமது சமூக மற்றும் அரசியல் சார்ந்தவிடயங்களில் தனித்துவமும் பாதுகாப்பானதுமான அமைப்பு ரீதியான கட்டமைப்பு உருவாக்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.இருக்கின்ற மாவட்டத்தின் சகலரையும் உள்வாங்கி வெளிப்படையான கலந்துரையாடல்கள் மூலம் இதனை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.குறிப்பாக உலமாக்களின் அதிக பங்களிப்பு அவசியமாக உள்ளது.

உங்களின் ஆலோசனைகளும்,பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

Fahmy Mohamed

Comments