கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – ஜனாதிபதி


கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சில்ப அபிமானி – 2017 சர்வதேச கைப்பணி விழாவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேச கைப்பணி விழா எதிர்வரும் 08ம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
கைப்பணித்துறையில் ஈடுபடுவோருக்கு தேவையான வசதிகள், வளங்கள் மற்றும் சந்தை வாய்ப்பினை வழங்கி அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்

Comments