சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்? சந்தேகநபர் கைது
நான்கு வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வீடொன்றில் தனிமையில் இருந்த குறித்த சிறுமியை சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
28 வயதான இந்த சந்தேகநபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment