வடக்கும் கிழக்கும் பிரிந்து இருப்பதே மக்களுக்கு நல்லது: இது ஒரு தமிழரின் பதிவு

Vijaya Baskaran

வடக்கு தெற்காக முரண்பட்ட இனவாத அரசியல் வடக்கு கிழக்காக முரண்பட்டு நிற்கிறது.எனக்கு எந்தவிதமான பிரிவினைகளிலும் உடன்பாடு இல்லை.ஆனால் வடக்கும் கிழக்கும் இணைந்து இருக்கவேண்டும் என சைவ,கிறிஸ்தவ தமிழர்கள் விரும்புகிறார்கள்.அவர்களின் நோக்கம் வடக்கு கிழக்கு இணைப்பு அல்ல.இந்த இணைப்பின் பெயரால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களை எப்படி சுருட்டிக்கொள்வது என்பதே ஆகும்.

1956 வரை அரசாங்க வேலைவாய்ப்புகளில் அய்ம்பது சதவீதமான பதவிகளை தமிழர்களே வைத்திருந்தார்கள். இவர்கள் யார்? யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வெள்ளாளர்கள் மட்டுமே .

1952 ஐ.தே.க அரசு தாய்மொழி ஆரம்பக் கல்வியை அறிமுகப்படுத்தியது .1956 இல் பண்டாரநாயக்கா உயர்கல்வியையும் தாய்மொழியில் கற்கலாம் என சட்டம் கொண்டுவந்தார்.இங்கேதான் யாழ்ப்பாண வெள்ளாளருக்கு முதல் அடி விழுந்தது.

அதே பண்டாரநாயக்கா வடபகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடசாலைகள் நிறுவி படிக்க வசதிகள் செய்துகொடுத்தார்.ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன.இது அடுத்த அடி.

1972 இல் தரப்படுதல் சட்டம் வந்தது.இது இதில் ஏனைய மாவட்ட மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைந்தனர்.பொறாமை கொழுந்துவிட்டுஎரிந்தது.இதனால் குடாநாட்டு ஒடுக்கப்பட்டசமூக மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.ஆனாலும் இது யாழ்ப்பாண வெள்ளாளருக்கு மரண அடி.

1972 வரை தமிழ் மொழியின் பேரால்,இனத்தின் பேரால் சகல வளங்களையும் தமதாக்கி சுகபோகங்களை அனுபவித்த வெள்ளாளசமூகம் இனவாதத்தை கக்கி ஆயுத போராட்டத்துக்கு வித்திட்டது.ஆனாலும் இங்கேயும் இந்த யாழ் மேல்தட்டு சமூகம் யுத்தத்தை காரணமாக்கி புலம் பெயர்ந்து தன்னை தக்கவைத்துக்கொண்டஅது.

வடபகுதி வெள்ளாளசமூகத்தின் ஆதிக்கவெறிக்கு குடாநாடு தவிர்ந்த ஏனைய இடங்கள் பலியாகின.வன்னி,கிழக்கு மாகாணம் அழிக்கப்பட்டது.குடாநாடு வளம்பெற ஏனைய இடங்கள் அழிக்கப்பட்டன.

தமிழின் பெயரால் தமிழினத்தின் பெயரால் அனைத்து சலுகைகளையும் யாழ் மேல்தட்டு சாதியினரின் அபகரிப்பு முயற்சியே வடக்கு கிழக்கு இணைப்பு.இதில் இன,மொழி நலன்கள் எதுவும் கிடையாது.

ஈ.பிஆர்எல்எப் அமைத்த வடகிழக்கு மாகாணசபையிலும் இந்த வெள்ளாள ஆதிக்கமே மறைமுகமாக உள் நுழைந்தது.அது கலைக்கப்பட்ட பின்னர் முழுமையாக யாழ்ப்பாண வெள்ளாளரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.அதில் பணியாற்றிய எண்பது வீதமான ஊழியர்கள் யாழ்ப்பாணத்தவர்களே.அதுவும் வெள்ளாளர்களே அதிகம்.பெயரளவில் கிழக்கு மாகாணத்தவர்கள் பிரதேசங்களில் பணியாற்றினார்கள்.

வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டபோதும் கிழக்கு மாகாண நிர்வாகத்தில் வடக்கின் ஆதிக்கமே மேலோங்கி நின்றது.இஸ்லாமியர்களின் பங்கு மிக குறைவாகவே இருந்தது.

இவ்வாறாக சகல நலன்களையும் சுருட்ட நிலைக்கும் வடக்கு யாழ் மையவாத அரசியல்வாதிகளை கிழக்கு மக்கள் எப்படி நம்பமுடியும்.? வடக்கே இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே உரிமைகளை மறுக்கும் இவர்களை கிழக்கு மக்கள் எப்படி நம்பமுடியும்?

வடக்கே உள்ள மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெள்ளாளர்களே.இதில் சம்பந்தனும் அடங்குவார்.சொந்த உறவுகளையே வஞ்சிக்கும் வெள்ளான இன தமிழர்களை கிழக்கு வாழ் மக்கள் எப்படி நம்புவது?முப்பது வருட யுத்தம் முடிந்தும் சாதி அஅரசியலை நடாத்தும் இவர்கள் இஸ்லாமியர்களை மதிப்பார்ளா?வடக்கு கிழக்கு இணைப்பு என்பது முழு சுயநலம்.

கிழக்கு பிரிந்து இருப்பதே கிழக்கு மக்களுக்கு நல்லது.அது மூன்று இனமதங்கள் வாழும் பூமி.வடக்கோடு இணைந்தால் கிழக்கின் அமைதி கெட்டுவிடும்.மத முரண்பாடுகளை விட்டு கிழக்கை தனி மாகாண அரசாக்க கிழக்கு மக்கள் முயலவேண்டும்.

Comments