வீடியோ).,கோறளைபற்று மத்தி- வாழைச்சேனை தனியான பிரதேச சபைக்கான கனவு நனவாகின்றது… சாட்டோ வை.எல்.மன்சூர்

இஹசானா பரீட்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல் சம்ப்ந்தமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினுாடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் செயற்படுவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவிற்கு இது தொடர்பான கொள்கைகளை வகுக்க,கருத்துக்களையும், முன் மொழிவுகளையும் பெற்றுக் கொள்வதற்கான அறிவித்தல் தேசிய பத்திரிகைகளில் விடுக்கப்படிருந்தது.
அதற்கமைவாக தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பாக ஏற்கனவே எமக்கு கிடைக்கப்பெற்ற கீழ்க்குறித்த முன்மொழிவுகள் தொடர்பில் தங்களது கருத்துக்களை இவ்வறிவித்தலின் கீழ் உள்ள விலாசத்திற்கு அல்லது தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 25.10.2017 ஆம் திகதிக்கு முன்னர் இக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளப்படிருந்தது.
1.கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை எனும் பெயரில் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல்.
2.கோறளைப்பற்று தெற்கு - கிரான் எனும் பெயரில் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல்
3.காத்தான்குடி நகர சபையைப் பிரித்து மாநகர சபை மற்றும் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பாக தங்களது புதிய கருத்துக்களை 01.10.2017 ஆம் திகதிக்கு முன்னர் இக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கொள்ளப்பட்டிருந்தது.
அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும்-பதில்
தலைவர் மாவட்ட குழு,மட்டக்களப்பு
விலாசம் : அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான குழு,
அரசாங்க அதிபர் காரியாலயம்,மட்டக்களப்பு
தொலைபேசி இல : 0652222233 0652222235
தொலைநகல் இல : 0652224466
மின்னஞ்சல் இல : gabatti@sltnet.lk
மேலுள்ள விடயங்கள் சம்பந்தமாக முன்னாள் முஸ்காங்கிரசின் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சாட்டோ மன்சூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அடங்க்ய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments