ஜப்பானின் முன்னாள் பிரதமரை சந்தித்தார் மஹிந்த


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுக்கியோ ஹடொயாமாவை சந்தித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் குழுவினரும் ஜப்பான் விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜப்பானின் முன்னாள் பிரதமரை மஹிந்த டோக்கியோவில் இன்று சந்தித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் ஜப்பானின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments