கருணா வழக்கிலிருந்து விடுதலை


ஒன்பது கோடி முப்பத்து மூன்று இலட்சம் பெறுமதியான குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்றை சுங்க வரி செலுத்தாமல் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த ஜீப் வண்டியை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments