ரவூப் ஹக்கீம் தேசிய பட்டியலினை நிசாம் காரியப்பருக்கு கொடுப்பதே காலத்தின் தேவையாக உள்ளது.. நாபீர் பெளண்டேசன்.
Ihzana Fareed
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமாக இருந்த ஹசன் அலி அப்பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டவுடன் அப்பதவியானது ஜனாதிபதி சட்டத்தரனியாகவும் முன்னால் கல்முனை மேயராகவும் இருந்த நிசாம் காரியப்பருக்கு கொடுப்பதற்கே முஸ்லிம் காங்கிரசின் தலைமை முடிவெடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை என நாபீர் பெளண்டேசன் பகிரங்கமாக தனது கருத்தினை வெளியிட்டிருந்தது.
முஸ்லிம் காங்கிரசின் தலைமை ஆறு மாத காலம் கடத்தியாவது கட்சியின் செயலாளர் பதவியினை ஜனாதிபதி சட்டத்தரனி நிசாம் காரியப்பருக்கு கொடுத்துள்ளமையினை நாபீர் பெளண்டேசன் வரவேற்கின்றது. ஆனால் மறு பக்கத்திலே தற்போதைய அரசியல் சூழ் நிலைக்கேற்பவும், தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர் நோக்குகின்ற சவால்களுக்கும் இலகுவான முறையில் முகம் கொடுக்கும் வகையில் கிழக்கிற்கு வழங்க இருக்கின்ற தேசிய பட்டியலினை புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரனி நிசாம் காரியப்பருக்கு கொடுப்பதே தற்போதைய காலத்தின் கட்டாய தேவை என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்… அதாவது துறைசார்ந்த அறிவாளிகளின் அறிவை பெற்றுக்கொகொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட தேசியப்படியல் ஆசனமானது நிசாம் காரியப்பருக்கு வழங்கப்படுவதனூடாக நிவர்த்தி செய்யப்படும். அது மட்டுமல்லாமல் நாட்டில் தற்பொழுது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கும், அழுத்தங்களுக்கும் பாராளுமன்றத்திலும் சரி, சர்வதேச ரீதியாகவும் சரி முஸ்லிம் காங்கிரசின் தலைமையோடு ஒன்று சேர்ந்து விளக்கங்களையும், அழுத்தங்களையும் கொடுக்ககூடிய ஒரு தேவைப்பாடான பாராளுமன்ற உறுப்பினராகவே நிசாம் காரியப்பர் செயற்படுவார் என்பது நாபீர் பெளண்டேசனின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது.
இதை விடுத்து அட்டாளைச்சேனக்கு என்றோ ஏனைய கல்குடா, புத்தளம், வன்னி என்று சிந்திக்காமல் தேசிய அரசியலின் நன்மை கருதியும், தற்பொழுது முஸ்லிம் கங்கிரசிற்குள் ஏற்படுள்ள உட்பூசல்களை நிவர்த்தி செய்யும் முகமாகவும், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரசின் அரசியல் இருப்பை தக்கவைக்கூடிய ஒரு தகுதியான தலைமையாகவே நிசார் கரியப்பரை நாபீர் பெளண்டேசன் பார்க்கின்றது. அத்தோடு முஸ்லிம் காங்கிரசின் தலைமை தற்பொழுது இருக்கின்ற தேசிய பட்டியலினை மீளப்பெற்று மீண்டும் வழங்க முடிவெடுத்தால் நிச்சயமாக அது ஜனாதிபதி சட்டத்தரனி நிசாம் காரியப்பருக்கே வழங்க வேண்டும். இல்லாவிடால் கட்சிக்கும், தலைமை அப்துர் ரவூப் ஹக்கீமிற்கும் விசுவாசமாக இருக்கின்ற சல்லானிடம் அப்பதவி இருப்பதே சிறந்தது என நாபீர் பெளண்டேசன் கருதுவதாக பொறியலாளர் உதுமான்கண்டு நாபீரிடம் வினவிய பொழுது தெரிவித்தார்

Comments
Post a Comment